தவறுகள்
பிழைகளுடன் பகிர்ந்துகொள்ள ...
Tuesday, January 24, 2012
முதுமை
காலப் பெருவெளிக்குள்
இழுத்துவரப்பட்ட
வயதுகளின் சாயல்கள்
நரைத்த முடி
சுறுங்கிய தோல்
தளர்ந்த நடையென
ஓரிடத்தில் அமர்ந்த
யோசிப்பில் தொடங்கிய
இளமைகால சிந்தனைகளின்
சீர்தூக்கல்கள்
நியாய அநியாய
மனோ பாவங்களின்
வெளிப்பட்ட வேதனையும்
இன்பங்களுமாய்
போகும் பொழுதுகளில்
நகரும் வாழ்வாய்
முதுமை.
Friday, December 30, 2011
பார்வை
பார்த்த நொடியில்
சுருங்கியது
என் பார்வையினாலா
அல்லது
காற்றின் வீச்சா
அல்லது
வேறு பொருளின் தொடலா
சுருங்கிய
தொட்டாற் சினுங்கியை
கேட்ட மனது.
Wednesday, December 14, 2011
புகைப்பட தொகுப்பு
மேகமூட்டத்துடன் கூடிய காலையில் பூமியில் விழும்
சூரிய ஓளி
மின்கம்பங்கிடையே காலைசூரியன்
எழும்பும் காலைகதிரவன்
கடவுளிடம் வேண்டி கோவில் வாயிலில்.....
வண்டிசாமி
மழையில் நனைந்த மலர்
உணவு தேடலின் போது....
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
LinkWithin